கணவர் 3 ஆண்டுகளாக குடும்பம் நடத்தல.. 2 வது கணவருடன் போலீசில் தஞ்சம் அடைந்த இளம்பெண்!
சேலம், காடையாம்பட்டி அருகே கொங்குப்பட்டியைச் சேர்ந்த ராமு (30) மற்றும் அவரது மனைவி பிரியா (24) இடையேயான குடும்ப பிரச்சனை, ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தையே பரபரப்பாக்கியது. துணிக்கடை தொழிலில் இருந்த பிரியா, தனக்குப் பணியிடத்தில் பழகிய சின்னதிருப்பதி பகுதியைச் சேர்ந்த ஹரிஷ்குமார் (25) உடன் நெருக்கம் அதிகரித்து, இருவரும் சில நாட்களுக்கு முன் ஊட்டியில் உள்ள முருகன் கோயிலில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தங்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரிவித்த பிரியா–ஹரிஷ்குமார் ஜோடி, இரண்டு நாட்களுக்கு முன்பு மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தனர். இதை அறிந்த ராமு மற்றும் அவரது உறவினர்கள் காவல் நிலையத்திற்குள் புகுந்து பிரியாவை தாக்க முயன்றதால், போலீசார் அவர்களை வெளியேற்றினர். ஆனால், நிலைய வெளியே காத்திருந்த ஹரிஷ்குமாரின் உறவினர்கள், ராமுவின் தரப்பினரை தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், “திருமணம் ஆன 3 ஆண்டுகளாக ராமு குடும்பம் நடத்தவில்லை; எனது வாழ்க்கையை நான் தேர்வு செய்கிறேன்” எனப் பிரியா தெரிவித்ததாக கூறப்படுகிறது. நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இருவரையும் உதறிவிட்டு பெற்றோருடன் செல்வதாக பிரியா முடிவு செய்தார். இதையடுத்து, போலீசார் அவரை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
