மாஞ்சா நூலால் இளம்பெண் கழுத்து அறுத்து படுகாயம்... சென்னையில் அதிர்ச்சி!
சென்னையில் தடையை மீறிப் பயன்படுத்தப்படும் மாஞ்சா நூல், மீண்டும் ஒரு அப்பாவி உயிரைப் பறிக்கப் பார்த்துள்ளது. ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது ஸ்கூட்டரில் அண்ணா சாலை வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகப் பட்டம் விடும் மாஞ்சா நூல் அவர் கழுத்தைச் சுற்றியுள்ளது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தப் பெண்ணின் கழுத்து அறுபட்டு, அவர் ரத்த வெள்ளத்தில் சாலையில் சரிந்து விழுந்ததைக் கண்டு அவ்வழியே சென்றவர்கள் அலறியடித்து ஓடி வந்தனர்.

உடனடியாக அங்கிருந்தவர்கள் அந்தப் பெண்ணை மீட்டு, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். "ஜாலிக்காகப் பட்டம் விடுகிறோம்" என்று ஒரு சிலர் செய்யும் அற்பத்தனமான செயல், இன்று ஒரு பெண்ணின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கியுள்ளது சமூக ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தடையை மீறி மாஞ்சா நூல் தயாரிப்பவர்கள் மற்றும் பட்டம் விடுபவர்களைக் குறிவைத்துத் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர். ஏற்கனவே பலமுறை எச்சரிக்கை விடுத்தும், இத்தகைய உயிராபத்தை விளைவிக்கும் செயல்கள் தொடர்வது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. "இனிமேலாவது கடும் நடவடிக்கை எடுத்து, இந்த மாஞ்சா கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பார்களா?" என்பதே சென்னை மக்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
