லிப்ட் கொடுப்பது போல் நைசாக பேசி காரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை... !
அரியானா மாநிலம் சோனிபெட் மாவட்டம் பஹல்கேஷ் கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண், கடந்த 16-ம் தேதி ஐடிஐ சவுக் பகுதியில் இருந்து தனது கிராமத்திற்கு செல்ல ஆட்டோவுக்காக காத்திருந்தார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் காரில் வந்து, கிராமத்தில் விட்டுவிடுவதாக கூறினர். ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர் காரில் ஏறினார்.

வழியில் அந்த இளைஞர்கள் காருக்குள் மது குடித்துள்ளனர். பின்னர் கிராமத்திற்கு அருகே ஆள்நடமாட்டமற்ற பகுதிக்கு காரை ஓட்டிச் சென்று, அங்கு வைத்து இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதன் பின்னர் அவரை கிராமத்திற்கு அருகே இறக்கிவிட்டு, மூவரும் காரில் தப்பிச் சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து இளம்பெண் குடும்பத்தினரிடம் தெரிவித்ததை தொடர்ந்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றத்தில் ஈடுபட்ட இளைஞர்களில் ஒருவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
