காவல் நிலையத்தில் காதலனுடன் தஞ்சம் அடைந்த இளம்பெண்.... கதறி அழுத தாய்!

 
குளச்சல்

காதலனை திருமணம் செய்ய இளம்பெண் வீட்டை விட்டு சென்ற நிலையில், தாய் கடத்தல் புகார் கொடுத்ததால் குளச்சல் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. திற்பரப்பு பகுதியைச் சேர்ந்த நாகப்பன் மகள் நிஷாந்தி (24), குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வுக் கூடத்தில் பணியாற்றி வருகிறார். பாட்டி ஊரான குளச்சல் தும்பக்காட்டுக்கு அடிக்கடி சென்றபோது, அங்குள்ள அபினாஷ் (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியது.

போலீஸ்

கல்குளம் தாலுகா அலுவலகத்தில் நில அளவையாளராக பணியாற்றும் அபினாஷை திருமணம் செய்ய நிஷாந்தி முடிவு செய்தார். ஆனால் வீட்டினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து, ஜனவரி 12-ம் தேதி நிச்சயதார்த்தம் நடத்த முடிவு செய்திருந்தனர். இதற்கு சம்மதம் இல்லாத நிஷாந்தி, வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு காதலன் வீட்டிற்கு சென்றார். இருவரும் திருமணம் செய்த புகைப்படத்தை செல்போன் ஸ்டேட்டஸாக வைத்ததால் விவகாரம் வெளியானது.

இதையடுத்து மகள் கடத்தப்பட்டதாக தாய் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் நிஷாந்தி அபினாஷ் வீட்டில் இருப்பது தெரியவந்தது. காவல் நிலையத்தில் ஆஜரான நிஷாந்தி, தன்னை யாரும் கடத்தவில்லை என்றும், காதலனை திருமணம் செய்ய விருப்பப்பட்டதாகவும் தெரிவித்தார். மகளின் காலில் விழுந்து தாய் கதறிய போதும், நிஷாந்தி உறுதியாக இருந்தார். சுமார் 3 மணி நேர நாடகத்திற்குப் பின், போலீசார் அறிவுரை வழங்கி இருவரையும் அனுப்பி வைத்தனர். காதல் முடிவில் வெற்றி பெற்றது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!