டார்ச்சர் தாங்க முடியல... மொட்டை அடித்துக் கொண்ட இளம் பெண்... வைரல் வீடியோ!

 
டார்ச்சர் டார்ச்சர்

குடும்பத்தினர் தொடர்ந்து திருமணம் செய்ய அழுத்தம் கொடுத்ததாக கூறி, ஒரு இளம்பெண் தனது நீண்ட கூந்தலை தானே மொட்டை அடித்துக் கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் பெண்கள் எதிர்கொள்ளும் திருமண அழுத்தம் குறித்து மீண்டும் பெரிய விவாதத்தை எழுப்பியுள்ளது. பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கை முடிவுகள் குறித்து சமூகத்தில் நிலவும் பார்வையும் கேள்விக்குறியாகியுள்ளது.

ஒரு சமூக வலைத்தள கணக்கில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், தனது கூந்தலை மொட்டை அடிக்கும் போது இளம்பெண் மனஉணர்ச்சியுடன்  தனது கருத்துக்கள் குறித்து பேசுகிறார்.  தனது கூந்தலை மிகவும் நேசிப்பதாக கூறிய அவர், சமூகமும் குடும்பமும் அமைதியாக வாழ விடவில்லை  . ஆண்கள் தங்கள் விருப்பப்படி வாழ்க்கை முடிவுகளை எடுத்தால் அது ஏற்றுக்கொள்ளப்படுகிறது; ஆனால் பெண்கள் அதே முடிவுகளை எடுத்தால் ஏன் சமூகம் வேறுபட்ட பார்வையில் பார்க்கிறது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.  

திருமணத்திற்கு தயாராக இல்லை என்பதை வெளிப்படையாக தெரிவிக்கவும், தொடர்ந்து ஏற்பட்ட மன அழுத்தத்திலிருந்து விடுபடவும் தான் இந்த முடிவை எடுத்ததாக அந்த இளம்பெண் கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில்  பல்வேறு கருத்துகளை உருவாக்கியுள்ளது. சிலர் விமர்சித்தாலும், பலர் பெண்களின் தனிநபர் சுதந்திரத்தை ஆதரித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!