இளைஞர் ஓடஓட விரட்டி படுகொலை... பட்டப்பகலில் பயங்கரம்!

 
 படுகொலை
தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 100 அடி சாலையில் மனோஜ் என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.  அந்தப்பக்கமாக வந்த மர்ம கும்பல் ஒன்று இவர்களை வழிமறித்தது. அதே இடத்தில் சராமாரியாக அரிவாளால்  வெட்டினர். 

இதனை தடுக்க முயன்ற மனோஜின் நன்பர்கள் இருவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இச்சம்பவத்தில் மனோஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதில் படுகாயம் அடைந்த மனோஜின் நண்பர்கள் இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ஆம்புலன்ஸ்

 காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த மனோஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ்

வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்ற மர்ம கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?