“உங்க இந்தி விளையாட்டு எங்களிடம் செல்லாது...” நடிகர் பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

 
பிரகாஷ்ராஜ்

“உங்க இந்தி விளையாட்டு எங்களிடம் செல்லாது” என்று நடிகர் பிரகாஷ்ராஜ் மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான தனது எக்ஸ் பக்கத்தில் ஆவேசமாக பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது. 

மும்மொழிக் கொள்கை வடிவில் இந்தித்திணிப்பை ஒன்றிய அரசு முயல்வதாக தமிழ்நாட்டில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று தாய்மொழி நாளாகவும் கொண்டாடப்படுவதால், முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ் மொழிக்கு ஆதரவாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

பிரகாஷ்ராஜ் - மோடி

பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடியைக் குறிப்பிடும் வகையில், ”உங்களுக்கு இந்தி தெரியும்.. நீங்க இந்தியில் பேசுறீங்க.. எங்களையும் இந்தியில் பேச சொல்லி கட்டாயப்படுத்துகிறீங்க. ஏன்னா உங்களுக்கு இந்தி மட்டும் தான் தெரியும். இந்த அபத்தமான விளையாட்டு எங்களிடம் செல்லாது.” என்று பதிவிட்டுள்ளார். மேலும் கெட் அவுட் மோடி ஹேஷ்டேக்கையும் பதிவிட்டுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web