"நீ கருப்பா இருக்க.. மருமகளை துரத்தி விட்ட மாமியார்... அடுத்து நடந்த ட்விஸ்ட்!

 
இளம்பெண் மன அழுத்தம் தனிமை

ஆந்திர மாநிலத்தில் நிறவெறி மற்றும் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் ஒருவர் வீட்டை விட்டு விரட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் வினுகொண்டா பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வரராவ் என்பவருக்கும், கோபிலட்சுமி என்ற பெண்ணுக்கும் கடந்த ஜூன் மாதம் விமரிசையாகத் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது கோபிலட்சுமியின் பெற்றோர் 25 பவுன் தங்க நகைகள் மற்றும் 12 லட்ச ரூபாய் ரொக்கப்பணத்தை வரதட்சணையாகக் கொடுத்துள்ளனர். ஆனால், திருமணமான மூன்று மாதங்களிலேயே கோபிலட்சுமியின் நிறத்தைக் காரணம் காட்டி கணவர் மற்றும் மாமியார் வீட்டார் அவரைச் சித்ரவதை செய்யத் தொடங்கியுள்ளனர்.

திருமணம்

கோபிலட்சுமி கருப்பு நிறத்தில் இருப்பதால் அவரைத் தனது மகனுக்குப் பிடிக்கவில்லை என்று கூறி மாமியார் அடிக்கடி தகராறு செய்துள்ளார். "நீ கருப்பாக இருப்பதால் கூடுதலாக வரதட்சணை கொண்டு வர வேண்டும்" என்று கூறி அந்தப் பெண்ணை மனதளவிலும் உடலளவிலும் துன்புறுத்தியுள்ளனர். ஒருகட்டத்தில் கொடுமை தாங்க முடியாமல் தவித்த கோபிலட்சுமியை, அவரது மாமியார் வலுக்கட்டாயமாக வீட்டை விட்டு வெளியே துரத்தியுள்ளார். புகுந்த வீட்டில் தனக்கு நேர்ந்த அநீதியைக் கண்டு கொதித்தெழுந்த கோபிலட்சுமி, நியாயம் கேட்டுத் தனது கணவர் வீட்டின் முன்பே அமர்ந்து திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

தற்கொலை இளம்பெண் தீ விபத்து கற்பழிப்பு பாலியல் கொலை க்ரைம்

மனைவி போராட்டத்தில் இறங்கியதை அறிந்த கணவர் மற்றும் மாமனார், மாமியார் ஆகியோர் உடனடியாக வீட்டைப் பூட்டிவிட்டுத் தலைமறைவாகினர். ஆட்கள் இல்லாத பூட்டிய வீட்டின் முன் அந்தப் பெண் நீதி கேட்டு அழுதது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்துத் தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கோபிலட்சுமி அளித்த புகாரின் பேரில், அவரது கணவர் கோடீஸ்வரராவ் மற்றும் மாமனார், மாமியார் உள்ளிட்ட மூன்று பேர் மீதும் வரதட்சணை கொடுமை மற்றும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நவீன காலத்திலும் நிறத்தை வைத்து ஒரு பெண்ணைப் புறக்கணிக்கும் இச்சம்பவம் சமூக வலைதளங்களில் பலத்த கண்டனங்களைப் பெற்று வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!