இதுக்கெல்லாமாடா அடிப்பீங்க... இன்ஸ்டாவில் ரீல்ஸ் பார்த்தவர்களுக்கு நேர்ந்த கொடூரம்!

 
இன்ஸ்டா

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்ஸ்டாகிராமில் இருவர் ரீல்ஸ் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தனர். இவர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சித்தேஷ் பஜ்ரங் சால்வி மற்றும் அவருடைய நண்பர் டாக்டர் டிவே படேல் இருவரும்  மருத்துவமனையின் அருகே அமர்ந்து செல்போனில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தனர். 

இன்ஸ்டா

அவர்கள் அந்த வீடியோவை பார்த்து சிரித்த நிலையில் அதனை கவனித்த ஒரு மர்மகும்பல் திடீரென அவர்களுடன் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டது.  10 பேர் இருந்த அந்த கும்பல் மொத்தமாக சேர்ந்து இருவரையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியது.  இது குறித்த தகவலின் பெயரில் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 

இன்ஸ்டா

இந்த விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் அமன் அசிம் ஷெய்க் மற்றும் சித்தார்த் ராஜூ என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.   இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?