பூங்காவில் இளைஞர் அடித்துக் கொலை... போதையில் நண்பர்கள் கொடூரம்!

 
ரவுடி

வேளச்சேரி அடுத்த பெரும்பாக்கம் எழில்நகரில் உள்ள நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு யு.பிளாக் பூங்காவில், நேற்று இரவு வாலிபர் ஒருவர் தலை மற்றும் உடலில் பலத்த காயங்களுடன் மயங்கி கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அவர் பெரும்பாக்கம் எஸ்.பிளாக்கை சேர்ந்த கார்த்திகேயன் (25) என உறுதி செய்தனர். மீட்கப்பட்ட அவர் தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஆம்புலன்ஸ்

விசாரணையில் கார்த்திகேயன் பழைய குற்றவாளி என்பதும், சம்பவ நாளில் நண்பர்களுடன் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இறந்த பாபு என்பவரின் நினைவாக மது குடித்துவிட்டு நடனம் ஆடிய நிலையில், மீண்டும் மதுகுடிக்க பணம் கேட்டதில் தகராறு ஏற்பட்டுள்ளது. பணம் தர மறுத்த குமாரின் சட்டை கிழிந்ததால் மோதல் முற்றியுள்ளது.

இதனைத் தொடர்ந்து பூங்காவில் இருந்த கார்த்திகேயனை தேடி சென்ற நண்பர்கள், மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். கார்த்திகேயன் மதுபாட்டிலால் தாக்கியதால் ஆத்திரமடைந்த 5 பேரும் பீர்பாட்டிலும் கல்லாலும் சரமாரியாக தாக்கியுள்ளனர். மயங்கி விழுந்த பின்னரும் பெரிய கல்லால் தாக்கிவிட்டு தப்பியுள்ளனர். இந்த வழக்கில் குமார், விஜயகுமார், சரத், சரண்ராஜ், கார்த்திக் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து கொலை வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!