21 வயசு வரை கல்யாணத்துக்கு காத்திரு... பெற்றோர் சம்மதிக்காததால் 19 வயது மாணவர் தற்கொலை!
Dec 2, 2025, 21:30 IST
ஜார்க்கண்டை சேர்ந்த 19 வயது இளைஞர் காதல் பிரச்சினையால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது சொந்த ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து, அவளை திருமணம் செய்ய விரும்பியுள்ளார். ஆனால் 21 வயதுக்கு பின்னரே திருமணம் செய்ய முடியும் என்பதால், குடும்பத்தினர் காத்திருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், கடந்த நவம்பர் 30ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத தருணத்தில், இளைஞர் கூரையிலிருந்த தாவணியால் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். வீட்டிற்கு திரும்பி வந்த குடும்பத்தினர், மகன் தூக்கில் சடலமாக தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியில் மூழ்கினர்.

உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும், மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார்.சம்பவம் குறித்து போலீசார் விபத்து மரணம் என வழக்குப் பதிவு செய்து, மேலதிக விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
