தொடரும் அவலம்... மீண்டும் அதிர்ச்சி... ஆன் லைன் செயலியால் இளைஞர் தற்கொலை!

 
கிருஷ்ணன்

ஆன்லைன் செயலி மூலம் கடன் தொல்லை அதிகரிப்பதால் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. இதனை களையும் வகையில் தமிழக அரசு ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு கட்டுப்பாடுகளும், தடைகளும் விதித்துள்ளது.இது குறித்த மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இருந்த போதிலும் தொடர் தற்கொலைகளை தடுக்க முடியவில்லை. அந்த வகையில் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

ஸ்டாலின் ஆன்லைன் ரம்மி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசித்து வருபவர் கிருஷ்ணன். இவர் மத்திய பாதுகாப்பு படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள் . மூத்த மகன் 22 வயது  வசந்த். இவர்  மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ளார். தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி  செங்கல்பட்டு  பள்ளியகரம் அருகே தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.  இவர் திடீரென தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர்  அவரது உடலை கைப்பற்றி விசாரணை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீஸ்

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விசாரணையில்  தனது சிம்கார்டை உடைத்து இருப்பது தெரியவந்தது. வசந்த் ஆன்லைன் செயலி மூலம் கடன் வாங்கியிருந்ததும், அதனை செலுத்த முடியாமல் தவித்து வந்த் அவர் தவித்து வந்ததையும் சக நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். இதற்காக தொடர்ந்து குடும்பத்தினரிடம் இருந்து அவர் அடிக்கடி பணம் பெற்று வந்த நிலையில் தற்போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  ஆன்லைன் செயலியில் கடன் பெற்று திரும்ப செலுத்த முடியாததால் இந்த விபரீத முடிவு எடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web