இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட வாலிபர் மரணம்... குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி மறியல்!

 
தூத்துக்குடி

 தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி தேரியூர் ஆண்டிவிளை பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் சுயம்புலிங்கம் (27). கூலித்தொழிலாளியான இவரும், உடன்குடி செல்வபுரத்தை சேர்ந்த தினேசும் நண்பர்கள். இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் உடன்குடி கூழையன்குண்டு பகுதியில் வைத்து மதுக்குடித்தனர். அப்போது, அங்கு தேரியூர் ஆண்டிவிளையைச் சேர்ந்த ஆறுமுகம், முருகன், ராமர் ஆகியோர் வந்தனர்.

ஆம்புலன்ஸ் 

அவர்களுக்கும், சுயம்புலிங்கம் தரப்புக்கும் இடையே திடீரென்று தகராறு ஏற்பட்டு முன்விரோதம் உருவானது. கடந்த 20-ந் தேதி இரவில் ஊரில் உள்ள கிரிக்கெட் மைதானம் அருகே அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராமர், முருகன், அவர்களது நண்பர் மணி ஆகியோர் சுயம்புலிங்கத்தை அவதூறாக பேசி கீழே பிடித்து தள்ளினர். உடனடியாக ஆறுமுகம் தான் கையில் வைத்திருந்த இரும்புக்கம்பியால் சுயம்புலிங்கத்தை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. 

இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதை பார்த்த தினேஷ் அங்கிருந்து ஓடிவிட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட ஆறுமுகம், ராமர், முருகன், மணி ஆகியோர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். மறுநாள் (21-ந் தேதி) காலையில் சம்பவ இடத்திற்கு தினேஷ் தனது நண்பர் ஒருவருடன் சென்றார். அப்போது, சுயம்புலிங்கம் மயங்கிய நிலையில் கிடந்தார்.அவரை மீட்டு சிகிச்சைக்காக உடன்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் சுயம்புலிங்கம் பரிதாபமாக இறந்தார்.

உத்தரபிரதேச போலீஸ்

இந்நிலையில், குற்றவாளிகளைக் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு நாடார் சங்க மண்டலத் தலைவர் கவாஸ்கர், மாவட்டச் செயலர் வெற்றிவேல், பனங்காட்டு மக்கள் கழக மாவட்ட நிர்வாகி மதன்ராஜ், அதிமுக கிளைச் செயலர் முத்துக்குமார், ஊர்மக்கள் சாலை மறியலில் ஈடுபடுவதற்காக திரண்டு வந்தனர். அவர்களிடம் திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ்குமார் பேச்சுவார்த்தை நடத்தி, குற்றவாளிகளைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது