மெட்ரோ தூணில் மோதி இளைஞர் உயிரிழப்பு... 5 மாதத்தில் பலி 6 ஆக உயர்வு!

 
மெட்ரோ
 

கொச்சியில் மெட்ரோ தூண்கள் தொடர்பான விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை கலமசேரியில் மோட்டார் சைக்கிள் மெட்ரோ தூணில் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மலப்புரம் மாவட்டம் கரிப்பூரை சேர்ந்த 26 வயதான முகமது முஸ்தபா இந்த விபத்தில் பலியானார். அவர் நண்பர்களுடன் சேர்ந்து கொச்சியில் ஐடி ஸ்டார்ட்அப் நிறுவனம் நடத்தி வந்தார். காக்கநாட்டில் வசித்து வந்த அவர் சொந்த ஊருக்கு செல்லும் போது விபத்து ஏற்பட்டது.

விபத்தில் கடுமையாக காயமடைந்த முஸ்தபாவை கலமசேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். பிஸ்மி ஹைப்பர் மார்க்கெட்டிற்கு அருகே உள்ள மெட்ரோ தூண் எண் 293 பகுதியில் இந்த விபத்து நடந்ததாக போலீசார் கூறினர்.

முதற்கட்ட விசாரணையில் முஸ்தபா மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டியதாக தெரியவந்துள்ளது. கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மெட்ரோ தூணில் மோதியதாகவும், அப்பகுதி சிசிடிவி காட்சிகள் இதை உறுதிப்படுத்தியதாகவும் போலீசார் தெரிவித்தனர். பிரேத பரிசோதனைக்குப் பிறகு முஸ்தபாவின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!