மாந்திரீகத்தால் பயங்கரம்... இளைஞர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை!
மத்திய பிரதேச மாநிலம் போபால் மாவட்டம் மகான் நகர் பகுதியை சேர்ந்த 21 வயது இளைஞர் சந்தன், குடும்பத்துடன் விவசாயம் செய்து வாழ்ந்து வந்தார். அதே பகுதியில் வசித்து வந்த சுஷில், மாந்திரீகம் மீது அதிக நம்பிக்கை கொண்டவர் என கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு சுஷிலின் தாய் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், இதற்கு காரணம் என்ன என்று அவர் ஒரு மாந்திரீகவாதியிடம் கேட்டுள்ளார்.

அப்போது, சந்தன் குடும்பத்தார் தான் பில்லி சூனியம் வைத்ததால் தாய் இறந்ததாக மாந்திரீகவாதி கூறியுள்ளார். இதை உண்மையென நம்பிய சுஷில் ஆத்திரமடைந்து, தனது நண்பர்களுடன் சேர்ந்து சந்தனை கொலை செய்ய திட்டமிட்டார். சந்தனை பேசிக் காட்டுக்குள் அழைத்து சென்று ஒன்றாக மது அருந்திய பிறகு, போதையில் இருந்த சந்தனை அடித்து கொலை செய்தனர்.

பின்னர் உடலுக்கு பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டு தப்பி சென்றனர். மறுநாள் ஆடு மேய்த்தவர்கள் பாதி எரிந்த உடலை கண்டுபிடித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். விசாரணையில் மூடநம்பிக்கையால் இந்த கொலை நடந்தது உறுதியானது. மூவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
