பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு!

 
அஜய்
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே பெயின்டிங் பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் பாய்ந்து இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே சக்கிலிபட்டி மேலத்தெருவைச் சேர்ந்த முத்துராஜ் மகன் அஜய்(23). இவர் பெயின்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் தனது பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பெயின்டிங் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சார வயர் அவர் மீது உரசியது. 

மின்சாரம்

இதில் தூக்கி வீசப்பட்ட அஜயை, அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அஜய் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இது குறித்து மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?