கள்ளக்காதலைக் கண்டித்த இளைஞர் வெட்டிக்கொலை - தூத்துக்குடியில் பரபரப்பு!
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே, திருமணமான பெண்ணுடன் தவறான உறவு வைத்திருந்த இளைஞரைக் கண்டித்ததால் ஏற்பட்ட முன்விரோதத்தில், அந்த இளைஞர் அவருடைய அண்ணனுடன் சேர்ந்து கூலித் தொழிலாளியான வேல்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே தாங்கை கைலாசபுரத்தைச் சேர்ந்தவர் வேல்குமார் (27). இவர் நேற்று முன்தினம் இரவு தனது ஊரில் இருந்து உடன்குடிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். உடன்குடி தேரியூர் கோவில் அருகே அவர் சென்றபோது, பின்னால் வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் அவருடைய வாகனத்தை வழிமறித்தனர்.
அந்த இருவரும் வேல்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த வேல்குமாரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கள்ளக்காதலைக் கண்டித்ததால் இந்தக் கொலை நடந்தது தெரிய வந்துள்ளது: உடன்குடி தேரியூரைச் சேர்ந்த செல்வம் (23) என்ற இளைஞர், திருமணமான ஒரு பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இந்தக் கள்ளக்காதல் குறித்து அறிந்த வேல்குமார், செல்வத்தைக் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த செல்வம், தனது அண்ணன் நாகராஜ் என்பவருடன் சேர்ந்து வேல்குமாரை வெட்டிக் கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தலைமறைவாக உள்ள செல்வம் மற்றும் நாகராஜ் ஆகிய இருவரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
