உயர் கோபுர மின்விளக்கு மீதேறி இளைஞர் தற்கொலை மிரட்டல் ... 7 மணி நேரம் போராடி மீட்பு!

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் அரசங்குப்பம் கிராம பேருந்து நிறுத்தத்தில் சுமார் 40 அடி உயரம் கொண்ட உயரகோபுர மின் விளக்கு உள்ளது. இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சுரேந்திரன் என்ற இளைஞர் இதன் மீது நேற்று திடீரென ஏறியதுடன் ‘என்னால் ஊருக்கு கெட்டப்பெயர் ஏற்பட்டுவிட்டது. நான் செத்து நல்ல பெயர் வாங்கப் போகிறேன்’ என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதனைக் கண்ட கிராமத்தினர் உடனடியாக தூசி காவல் நிலையத்துக்கும், செய்யாறு தீயணைப்பு துறைக்கும் இது குறித்து தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் விரைந்து சென்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் கீழே இறங்க மறுத்த அவர் தொடர்ந்து உயர் கோபுர மின்விளக்கு மீதே அமர்ந்திருந்தார். இதனால், அங்கு சற்று பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதை பார்த்த இமானுவேலுவின் தாயார் கண்ணீர்விட்டு கதறியழுது மகனை இறங்கி வருமாறு மன்றாடினார். அதற்கும் செவி சாய்க்காத அவர் மின்விளக்கு கோபுரத்தில் உள்ள லைட்டுகளை உடைத்து சேதப்படுத்தினார்.
போதைப்பழக்கத்துக்கு அடிமையான இமானுவேல் கடந்த பிப்ரவரி மாதம் கையில் பட்டா கத்தியை சுழற்றியபடி பொதுமக்களை மிரட்டி இடையூறு செய்ததோடு, அதை சமூகவலைதளத்தில் ரீல்ஸ் வெளியிட்டதாக தூசி காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். ஜாமீனில் வெளியே வந்தவர் நேற்று காலை தற்கொலை மிரட்டல் விடுக்கும் செயலில் ஈடுபட்டுள்ளார் என தெரியவந்தது.
இதற்கிடையில், அரசங்குப்பம் கிராமத்தில் அகற்றப்பட்ட அம்பேத்கர் சிலையை மீண்டும் நிறுவினால் தான் கீழே இறங்குவேன் என இமானுவேல், அதிகாரிகளிடம் கோரிக்கையை முன்வைத்தார். அவரது கோரிக்கைக்கு ஆதரவாக கிராமத்தினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டதால் கூடுதலாக 20க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புக்காக வரவழைக்கப்பட்டனர்.
மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி சிலை வைக்க முடியாது என்று கூறியதால், அதிருப்தி அடைந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை, அதிகாரிகள் சமாதானம் செய்தனர். தொடர்ந்து, தீயணைப்பு துறையினர் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு ஏணி மூலம் ஹைமாஸ் மின் விளக்கு மீது சென்று அவரை மீட்டதுடன், அங்கிருந்து கிரேன் உதவியுடன் கீழே கொண்டு வந்தனர். சுமார் 7 மணி நேர முயற்சிக்குப் பின்னர் கீழே அழைத்து வரப்பட்ட அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்ததுடன், 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன் பிறகே அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!