மனைவி வேண்டாம்... கள்ளக்காதலியை கல்யாணம் செய்து வைங்க... இளைஞர் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல்!

 
விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆராய்ச்சிபட்டி பகுதியை சேர்ந்த 30 வயது மாரீஸ்வரனுக்கு பிரியதர்ஷினியுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், பிரியதர்ஷினி தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். மது பழக்கத்திற்கு அடிமையான மாரீஸ்வரன் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், அதே ஊரை சேர்ந்த திருமணமான பெண்ணுடன் கள்ள தொடர்பில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

விருதுநகர்

இதனால் மனமுடைந்த பிரியதர்ஷினி கணவனை பிரிந்து தாய் வீட்டிற்கு சென்றார். தன்னை அடித்து துன்புறுத்தியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் மாரீஸ்வரனை விசாரணைக்கு அழைத்தனர். குடிபோதையில் காவல் நிலையத்திற்கு வந்த மாரீஸ்வரன், பின்புறம் இருந்த செல்போன் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றார்.

டவரின் மீது அமர்ந்தபடி, “எனக்கு என் மனைவி வேண்டாம். அந்த பெண்ணை தான் கல்யாணம் செய்து வைக்க வேண்டும். வாரத்திற்கு 30 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும்” என போலீசாரை மிரட்டினார். தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு, இரண்டு மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர் கீழே இறக்கப்பட்டார். தற்கொலை முயற்சி வழக்கில் மாரீஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!