நடுவானில் விமான பணிப்பெண்ணுக்கு கத்திக்குத்து.. அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்!

 
அமெரிக்கா

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸிலிருந்து போஸ்டன் நகருக்கு ஏராளமான பயணிகளுடன் யுனைடெட் பிலைட் 2609 என்ற விமானம் சென்றுகொண்டிருந்தார். இந்த விமானத்தில் பிரான்சிஸ்கோ செவெரோ டோரஸ் என்ற 33 வயது  நபர் பயணித்துள்ளார். அப்பொழுது அவர் திடீரென்று விமானத்தின் அவசர வழிக்கதவை திறப்பதற்காக அதன் கைப்பிடியை சேதம் செய்தார். இதனால் அபாய மணி விமானத்தில் ஒலித்தது.
அமெரிக்கா

நடுவானில் அபாய மணி ஒலித்ததால் பயணிகளும், விமான ஊழியர்களும் அதிர்ந்தனர். உடனே அந்த இடத்துக்கு விரைந்த பணிப்பெண்கள் அவரை தடுக்க முயன்றனர். ஆனால், விமான பணிப்பெண் ஒருவரை  பிரான்சிஸ்கோ கூர்மையான ஸ்பூன் மூலம் மூன்றுமுறை தொண்டை பகுதியில் குத்தியுள்ளார்.

மற்றப் பயணிகள் மற்றும் சக ஊழியர்களின் உதவியுடன் அவர் தடுக்கப்பட்டார். பின்பு  விமானம் போஸ்டனில் தரையிறங்கிய பிறகு காவல் துறை வசம் அவர் ஒப்படைக்கப்பட்டார். 

அமெரிக்கா

விசாரணையில் அவர், தற்காப்புகாகவே பணிப்பெண்ணை தாக்கியதாக கூறினார். மேலும் விமானத்தில் இருந்து குதிப்பதற்காகவே அவசர வழிக் கதவை திறந்ததாகவும் அவர் தெரிவித்தார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விமானங்களில் பறக்க டோரஸ்ற்கு  தடை விதித்துள்ளதாக யுனைடெட் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web