மின்சார ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த இளைஞர்... ஆர்.பி.எஃப் காவலர் தாக்குதல் !
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற மின்சார ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணித்த இளைஞரைச் சுற்றி பரபரப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த அந்த இளைஞரை டிக்கெட் பரிசோதகர் சோதித்த போது டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கீழே இறக்கி அபராதம் விதிக்க முயன்றபோது, டிக்கெட் பரிசோதகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து ரயில்வே பாதுகாப்புப் படை காவலர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவலர் இளைஞரை பிடிக்க முயன்றபோது இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. பின்னர் தப்பிக்க முயன்ற இளைஞரை திருவொற்றியூர் ரயில் நிலையம் நடைமேடையில் தரையில் தள்ளி கழுத்தில் கால் வைத்து தாக்கிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். மது போதையில் பயணம் செய்தவர் கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த தர்மன் (22) என தெரியவந்தது. இவர்மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து அனுப்பியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
