காவல் நிலையம் முன்பு இளைஞர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!

கோவை குனியமுத்தூர் காவல் நிலையம் முன்பு புகாரளிக்க சென்ற இளைஞர் தீக்குளிக்க முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதிர்ச்சியடைந்த போலீசார் இளைஞரைத் தடுத்து நிறுத்தி மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வைப்பூர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (30). இவர் கோவைப்புதூரில் உள்ள பாரதி நகரில் தங்கியிருந்த படியே அந்த பகுதியில் பிளம்பிங் வேலை செய்து வருகிறார். இவரது இரண்டாவது மனைவி மேகலா.
இந்நிலையில் குனியமுத்தூர் காவல் நிலையத்திற்கு சென்ற கார்த்திகேயனிடம் அங்கிருந்த காவலர்கள் விசாரித்த போது, தனது 2வது மனைவி மேகலா மீது புகார் கொடுக்க வந்திருப்பதாக தெரிவித்தார்.
அவரை அங்கே அமரச் சொன்ன காவலர்கள், எதிர் மனுதாரரான அவரது மனைவியை அழைத்து விசாரிப்பதாக கூறினர். அப்போது திடீரென ஆவேசமான கார்த்திகேயன், குனியமுத்தூர் காவல் நிலையத்தின் நுழைவு வாயிலுக்குச் சென்றார்.
தனது வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த காலி வாட்டர்கேனை எடுத்து தனது இருசக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோலை பிடித்து தன் மீது ஊற்றிக் கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்யப் போவதாக கூறினார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத காவலர்கள் அதிர்ச்சியடைந்து, கார்த்திகேயனை தடுக்க முயன்றனர். அப்போது காவலர்களை தகாத வார்த்தைகளால் திட்டி கார்த்திகேயன் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தொடர்ந்து காவலர்கள் அவரை மடக்கிப் பிடித்து தடுத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வ பாண்டியன் குனியமுத்தூர் போலீசாரிடம் புகார் அளித்தார். காவலர்களை அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்து பணி செய்ய விடாமல் தடுத்த கார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது. இந்த புகாரின் பேரில் குனியமுத்தூர் காவல்துறையினர் கார்த்திகேயனை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!