ஆஸ்கர் விருது ஒளிபரப்பு உரிமையை வாங்கிய யூடியூப்!

 
ஆஸ்கர்
 

 

திரைத்துறையின் உயரிய அங்கீகாரமாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, ஆண்டுதோறும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுகிறது. இதுவரை இந்த விழாவை ஏபிசி தொலைக்காட்சி சேனல் நேரடியாக ஒளிபரப்பி வந்தது. 2028 வரை ஒளிபரப்பு உரிமை ஏபிசி வசமே இருக்கும் நிலையில், அந்த ஆண்டில் ஆஸ்கரின் 100வது ஆண்டு விழா கொண்டாடப்பட உள்ளது.

இந்த நிலையில், 2029 முதல் 2033 வரை ஆஸ்கர் விருதுகளின் உலகளாவிய ஒளிபரப்பு உரிமையை யூடியூப் தளம் பெற்றுள்ளது. கூகுள் நிறுவனத்துக்குச் சொந்தமான யூடியூப், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் சிவப்பு கம்பள வரவேற்பு முதல் விருதளிப்பு வரை அனைத்து நிகழ்வுகளும் யூடியூப்பில் வெளியாகும்.

இதற்காக யூடியூப்பில் பிரத்யேக டிஜிட்டல் தளமும் உருவாக்கப்பட உள்ளது. இதன் மூலம் ஆஸ்கர் விழா உலகெங்கும் இலவசமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படும். இதனால் பார்வையாளர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்கர் விருதுகளை மேலும் அதிக ரசிகர்களிடம் கொண்டு செல்லும் முயற்சியாக இந்த மாற்றம் பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!