வைரல் வீடியோ!! ஓடும் காரில் இருந்து பறந்த ரூபாய் நோட்டுக்கள்!!

விஜய் சேதுபதி நடித்த வெப் சீரியஸ் 'பர்ஸி' சமீபத்தில் ஓடிடியில் வெளியானது. அதில் வில்லன் போலீஸிடம் இருந்து தப்பிப்பதற்காக காரில் இருந்து ரூபாய் நோட்டுகளை வெளியே விசுவார். அப்போது ஏற்பட்ட குழப்பத்தில் அவர் தப்பி விடுவார். அதேபோன்று உண்மையாகவே ஓடும் காரில் இருந்து ரூபாய் நோட்டுகளை இளைஞர்கள் வீசி எறிந்து வீடியோவை வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
#WATCH | Haryana: A video went viral where a man was throwing currency notes from his running car in Gurugram. Police file a case in the matter.
— ANI (@ANI) March 14, 2023
(Police have verified the viral video) pic.twitter.com/AXgg2Gf0uy
அரியானா மாநிலம் குருகிராம் டி.எல்.எப்.கோல்ப் கோர்ஸ் சுரங்கப்பாதை வழியாக கடந்த 2ஆம் தேதியன்று இரவில் வெள்ளை நிற கார் சென்று கொண்டிருந்தது. அக்காரின் டிக்கியில் இருந்து கொண்டு முகக்கவசம் அணிந்த நபர் ரூபாய் நோட்டுகளை வீசி சென்றார். இதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதையடுத்து குருகிராம் போலீசார் அங்கு வைத்திருந்த சிசிடிவி கேமிரா பதிவுகளை வைத்து வெள்ளை நிற காரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், கரன்சிகளை வீசிய நபர் டெல்லி திலகர் நகரைச் சேர்ந்த யூடியூப்பர் ஜோரேவர் சிங் கல்சி என்பது தெரியவந்தது. அவருடன் சேர்த்து காரை ஓட்டி வந்த டிரைவரும் கைது செய்யப்பட்டனர்.
'பர்ஸி' என்ற வெப் சீரிஸ் -ல் வரும் காட்சியை போன்று வீடியோ உருவாக்கி, யூடியூப்பில் பதிவேற்றவே இந்த செயலில் ஈடுபட்டதாக கைதானவர்கள் கூறினர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க