உஷார்... இன்றும், நாளையும் இந்த 5 புறநகர் ரயில்கள் ரத்து!

 
மின்சார ரயில்

பராமரிப்புப் பணிகள் காரணமாகச் சேவை மாற்றம்சென்னை சென்ட்ரல் - கூடூர் பிரிவில் உள்ள மீஞ்சூர் மற்றும் அத்திப்பட்டு ரயில் நிலையங்களில் இன்று சனிக்கிழமை (டிசம்பர் 13) மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14) பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், 5 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகச் சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.பராமரிப்புப் பணிகள் தினந்தோறும் காலை 10 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது.

மின்சார ரயில்

ரத்து செய்யப்பட்ட ரயில் சேவைகள் (டிசம்பர் 13 & 14):ரயில் விவரம்ரத்து செய்யப்படும் தேதிசென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி (காலை 9.40 மணி)டிசம்பர் 13கும்மிடிப்பூண்டி - சென்னை சென்ட்ரல் (காலை 9.55 மணி)டிசம்பர் 13கும்மிடிப்பூண்டி - சென்னை கடற்கரை (காலை 10.55 மணி)டிசம்பர் 13சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி (காலை 9.00 மணி)டிசம்பர் 14கும்மிடிப்பூண்டி - சென்னை சென்ட்ரல் (காலை 11.25 மணி)டிசம்பர் 14நிறுத்தப்படும் ரயில்கள் (பகுதி ரத்து):டிசம்பர் 12 & 13 தேதிகளில்: சூலூர்பேட்டையிலிருந்து காலை 10 மணிக்குச் சென்ட்ரல் செல்லும் ரயில் பொன்னேரியுடன் நிறுத்தப்படும்.

மின்சார ரயில்

டிசம்பர் 13 தேதி சென்ட்ரலிலிருந்து காலை 10.30 மணிக்குக் கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில் எண்ணூருடன் நிறுத்தப்படும்.சிறப்பு ரயில்கள் இயக்கம் (பயணிகளின் வசதிக்காக) டிசம்பர் 13: பொன்னேரியிலிருந்து பகல் 12 மணிக்குச் சென்ட்ரலுக்குச் சிறப்பு ரயில் இயக்கப்படும்.டிசம்பர் 14: எண்ணூரிலிருந்து பகல் 12 மணிக்குச் சென்ட்ரலுக்குச் சிறப்பு ரயில் இயக்கப்படும்.டிசம்பர் 13 & 14: எண்ணூரிலிருந்து காலை 10.36 மணிக்குச் சென்ட்ரலுக்குச் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.பயணிகள் இந்த ரயில் சேவை மாற்றங்களைக் கவனத்தில் கொண்டு பயணத்தைத் திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!