விஜயகாந்த் உடல்நிலை என்ன காரணம்... பிரேமலதா சொன்ன தகவல்!

 
விஜயகாந்த்

தான் நம்பியவர்கள், தனக்கு நெருக்கமானவர்கள் செய்த துரோகத்தை கேப்டனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவரது உடல் நிலை பின்னடைவுக்கு இது தான் காரணம் என்று பிரேமலதா விஜயகாந்த் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளது வைரலாகி வருகிறது.

தேமுதிக அதிமுகவும் கூட்டணி வைத்திருந்த போது, யாருக்கெல்லாம் கேப்டன் எம்.எல்.ஏ., சீட் கொடுத்து அழகு பார்த்தாரோ அவர்களில் பலரும் நம்பிக்கை துரோகம் செய்திருந்தனர். தான் நம்பியவர்கள் செய்த துரோகத்தை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மனதளவில் அவர் தளர்ந்து போனதற்கு அது தான் காரணம் என்று பிரேமலதா கூறியுள்ளார்.

முன்னதாக, தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலாளாராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரேமலா, "எனக்கு கட்சியின் பொதுச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அது ஒன்று மேடையில் வைக்கப்பட்டுள்ளது போன்ற மலர் கிரீடம் கிடையாது. அதுவொரு முள் கிரீடம்" என தேமுதிக பொதுக்குழுக் கூட்டத்தில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

சென்னை திருவேற்காட்டில் தேமுதிக தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் தேமுதிக நிறுவனத் தலைவர் - பொதுச் செயலாளர் விஜயகாந்த் கலந்துகொண்டார். அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்தப் பொதுக்குழுவில் மொத்தம் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

பின்னர் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரேமலதா விஜயகாந்த் கூட்டத்தில் பேசுகையில், "இன்றைய உலகில், இனிமேல் நமது தலைவரைப் போல ஒருவர் பிறந்து வந்தால்கூட, தேமுதிக தலைவர் விஜயகாந்தைப் போன்ற மனிதரை, புனிதரை யாரும் பார்க்க முடியாது. அவரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தக் கட்சி சாதாரண கட்சி இல்லை. அவருடைய லட்சியம், கொள்கைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி தேமுதிக. தலைவர் விஜயகாந்த், எதற்காக இந்தக் கட்சியை ஆரம்பித்தாரோ, அந்த லட்சியத்தை கொள்கையை எப்போது நாம் அடைவோம். தமிழகத்தில் தேமுதிக ஆட்சி அமைக்கும் நாள்தான், நமது தலைவரின் லட்சியமும், கொள்கையும் வென்றதற்கான அர்த்தம். நான் இதை வெறும் வார்த்தைகளுக்காக சொல்லமாட்டேன் என்பது உங்களுக்குத் தெரியும்.

நான் உங்களுக்காக 24 மணி நேரமும் உழைக்க தயாராக இருக்கிறேன். என்னோடு இணைந்து நீங்கள் அனைவரும் உண்மையாக, ஒற்றுமையாக உழைக்க தயாரா என்பதுதான் என்னுடைய கேள்வி. காரணம், பலர் என் முன்னால் ஒன்று பேசுகிறீர்கள். நான் இல்லாதபோது பலர் வேறு ஒன்று பேசுகிறீர்கள். அனைத்தும் எனக்கு தெரியும். யார் யார் என்ன பேசுகிறீர்கள், என் முதுகுக்கு பின்னால் என்ன பேசுகிறீர்கள் என்று எல்லாம் எனக்கு தெரியும். அது தெரிந்தும், நான் அமைதி காப்பது எதற்காக தெரியுமா? தலைவர் விஜயகாந்த் ஆரம்பித்த இந்தக் கட்சியை கரை சேர்க்க வேண்டும் என்ற உறுதிதானே, தவிர வேறு எதுவுமே கிடையாது.

இன்று எனக்கு கட்சியின் பொதுச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அது ஒன்று மேடையில் வைக்கப்பட்டுள்ளது போன்ற மலர் கிரீடம் கிடையாது. அதுவொரு முள் கிரீடம். உண்மையாகவே நான் பதற்றமாகவும், மன அழுத்தத்துடன் இருக்கிறேன். மிகப்பெரிய பொறுப்பை அனைவரும் சேர்ந்து எனக்கு வழங்கி இருக்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். நான் எதற்கு அஞ்சமாட்டேன். சவால் என்று வந்தால், சவால்தான்.

மார்கழி மாத குளிர்... சளி, இருமலை விரட்ட இதைச் செய்தாலே போதும்!

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web