அடுத்தடுத்து சோகம்... ஜப்பான் நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 100யைத் தாண்டியது!

 
ஜப்பான்

இந்த வருடம் ஜப்பானுக்கு விடியும் போதே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஒளித்து வைத்திருந்தது போல. புதுவருஷத்தன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டு ஜப்பான் மக்களை அலற வைத்த நிலையில், அடுத்தடுத்து மேலும் சுனாமி அறிவிப்பு கலவரப்படுத்தியது. சுனாமி சுழன்றடித்து ஒரு வார காலமான போதும், இன்னும் நிலநடுக்கத்தில் இருந்து ஜப்பானியர்கள் மீளவில்லை. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைப்பெற்று வரும் நிலையில், நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100யைக் கடந்துள்ளது. 

நிலநடுக்கத்தால் உருக்குலைந்த ஜப்பான்.

ஜப்பானில் புத்தாண்டு தினத்தன்று மத்திய மாகாணமான இஷிகாவாவில் உள்ள நோட்டோ தீபகற்பத்தில் 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. நிலநடுக்கம் காரணமாக, கிழக்கு ரஷ்யா வரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் சாலைகள், துறைமுகம் என உள்கட்டமைப்புகள் மிகக் கடுமையாக சேதமடைந்தன.

இந்த கோர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 98 ஆக இருந்தது. அனாமிசுவில் மேலும் இரண்டு பேர் இறந்தது இன்று பதிவானதை அடுத்து பலி எண்ணிக்கை 100- தாண்டி இருக்கிறது.

இந்த நிலநடுக்கத்தில் 59 பேர் வாஜிமா நகரத்திலும், 23 பேர் சுசுவிலும், மற்றவர்கள் அருகாமை நகரங்களிலும் இறந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 27 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக இஷிகாவா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜப்பானில் நில நடுக்கம்.

இன்று காலை நிலவரப்படி, ஹோன்ஷுவின் இஷிகாவா பிராந்தியத்தில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 211 ஆக கணக்கிடப்பட்டுள்ளது. அவர்களை கண்டறியும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நிலநடுக்கம் காரணமாக, இஷிகாவா பிராந்தியத்தில் சுமார் 23,800 வீடுகளுக்கு மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. 66,400-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தண்ணீர் விநியோகம் இல்லை. 31,400-க்கும் மேற்பட்ட மக்கள் அரசு அமைத்துள்ள 357 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மீட்புப் படையினர் ஆயிரக் கணக்கில் இடிந்து கிடக்கும் கட்டிடங்களின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் 24 மணி நேரமும் ஈடுபட்டு வருகின்றனர்.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web