BPL நிறுவனர் டிபிஜி நம்பியார் காலமானார்... எடியூரப்பா உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்!

 
பிபிஎல்

பிரிட்டிஷ் இயற்பியல் ஆய்வகக் குழுவின்(BPL) நிறுவனர், அனைவராலும் டிபிஜி (DPG) என்று பிரபலமாக அறியப்பட்ட கோபாலன் நம்பியார் காலமானார். அவருக்கு வயது 94.
"இந்திய எலக்ட்ரானிக் நிறுவனமான பிபிஎல் குழும நிறுவனர் டிபி கோபாலன் நம்பியார் இன்று காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பாஜக தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகரின் மாமனார் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கோபாலன் நம்பியார் கடந்த சில காலங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் இன்று காலை 10.15 மணியளவில் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, கர்நாடக  மாநில முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா தனது ட்விட்டர் பக்கத்தில், "சின்னமான பிபிஎல் பிராண்டின் நிறுவனர் ஸ்ரீ டிபிஜி நம்பியாரின் மறைவு வருத்தமளிக்கிறது, அவர் நீண்டகாலமாக நெருங்கிப் பழகியவர். ஸ்ரீ நம்பியாரின் மகத்தான பங்களிப்புகளும் மரபுகளும் இருக்கும். அவரது அன்புக்குரியவர்களுக்கு என் இதயப்பூர்வமான இரங்கல்கள் எப்போதும் இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

பிபிஎல்

காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தனது ட்விட்டர் பதிவில், “ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட கேரள தொழிலதிபர் ஸ்ரீ டிபிஜி நம்பியார் (96) காலமானதை அறிந்து வருத்தமடைகிறேன். அவர் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் ஒரு புதிய அத்தியாயத்தை இங்கு நிறுவி அதிநவீன வசதியை கொண்டு வந்திருந்தார். பாலக்காட்டில் 1961ல் பிரிட்டிஷ் இயற்பியல் ஆய்வகங்களை வாங்கிய பிறகு பிபிஎல் லிமிடெட் என மறுபெயரிடப்பட்டது" என்று பகிர்ந்துள்ளார்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web