பெரும் சோகம்... பேருந்துடன் டெம்போ மோதி கோர விபத்து; 8 குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழப்பு!

 
ராஜஸ்தான் பேருந்து டெம்போ விபத்து

ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் பகுதியில் பேருந்தும்,  டெம்போவும் நேருக்கு நேராக மோதிக் கொண்டு கோர விபத்து ஏற்பட்டதில் 8 குழந்தைகள் உட்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்

குவாலியரில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த ஸ்லீப்பர் கோச் பேருந்து ஒன்று வேகமாக சென்று கொண்டு இருந்த நிலையில், சுமிபூர் பகுதி அருகே சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரில் வந்துக் கொண்டிருந்த டெம்போ வேன் மீது பயங்கர வேகத்தில் மோதி கோர விபத்துக்குள்ளானது.

ராஜஸ்தான் பேருந்து டெம்போ விபத்து

இந்த விபத்தில் இர்பான்(38), அவரது மனைவி ஜூலி (34) மற்றும் 8 குழந்தைகள் உட்பட 12 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பேருந்து ஓட்டுநர் அதிக வேகமாக பேருந்தை ஓட்டி வந்ததே விபத்துக்கான காரணம் என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை!

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!