மீண்டும் அதிர்ச்சி... எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து... அலறிய பயணிகள்!

 
நாக்பூர் ரயில் விபத்து நாக்பூர் ரயில் விபத்து

சமீபகாலமாக ரயில் விபத்துக்கள் சர்வ சாதரணமாக நிகழ்வது வழக்கமாகி விட்டது. கடந்த சில தினங்களுக்கு முன் திருவள்ளூர் கவரப்பேட்டையில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது நாடு முழுவதும் அதிர்வலையை கிளப்பியது. 

இந்நிலையில், நாக்பூரில் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மகாராஷ்டிராவில் உள்ள கலாம்னா ரயில் நிலையம் அருகே சிஎஸ்எம்டி ஷாலிமார் எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ்2 என்ற இரண்டு பெட்டிகளும் ஒரு பார்சல் பெட்டியும் தடம் புரண்டன. இந்த சம்பவத்தில் உயிர்சேதமோ, பெரிய காயமோ ஏற்படவில்லை.

இருப்பினும், பயணிகளை அந்தந்த இடங்களுக்கு அழைத்துச் செல்ல ரயில்வே நிர்வாகம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விபத்து உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், மறுபுறம் சீரமைப்பு பணியும் நடந்து வருகிறது. முன்னதாக அக்டோபர் 9 ஆம் தேதி, கல்யாண் ரயில் நிலையத்தில் உள்ளூர் ரயில் தடம் புரண்டது குறிப்பிடத்தக்கது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!