மளிகை கடைக்காரரிடம் மாமூல் கேட்டு தகராறு.. போதை கும்பலின் தாக்குதல் வீடியோ வெளியானது!
போதையில் மர்ம கும்பல் பெட்டிக்கடை உரிமையாளரை கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகி புதுவை முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து முன்னாள் முதல்வர் உட்பட எதிர்கட்சியினர், வணிகர்கள் ஒன்றுக்கூடி போராட்டம் நடத்திய நிலையில், வழக்குப்பதிவு செய்து தாக்குதலுக்கு உள்ளான கடைக்காரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். முன்னதாக அவரை ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து சட்டசபை சாலையில் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
மாமூல் கேட்டு தர மறுத்த ஊழியர்... சோடா பாட்டிலில் அடி.. வலி தாங்க முடியாமல் துடிதுடிக்கும் அதிர்ச்சி காட்சி!#Puducherry #Rowdys #Police #CCTV #Attack #NewsTamil #NewsTamil24x7 pic.twitter.com/VRyeLaRURM
— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) October 17, 2024
புதுச்சேரி மாநிலத்தில் இயங்கி வரும் மளிகைக் கடை ஒன்றில், இரவு நேரத்தில் போதையில் கும்பல் ஒன்று வந்துள்ளது. அப்போது கடை உரிமையாளரிடம் மாமூல் கேட்டு வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது.
கடை உரிமையாளர் மாமுல் பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த கும்பல் அங்கிருந்து சோடா பாட்டிலை எடுத்து உரிமையாளரை கடுமையாக தாக்கியது. கடையில் இருந்த மற்ற பொருட்களையும் தூக்கி வீசி தாக்கினர். இந்த விவகாரம் தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதையடுத்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
