திராவிட இயக்கங்கள்தான் பகுத்தறிவை வளர்த்து வருகிறது.. கேரளாவில் உதயநிதி பேச்சு

 
உதயநிதி உதயநிதி
கேரளத்தில், ‘திராவிட இயக்கங்கள் தான் பகுத்தறிவையும், அறிவியல் பூர்வ வளர்ச்சியையும் வளர்த்து வருகிறது’ என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். 

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மலையாள மனோரமா நடத்தும் இலக்கிய விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: "திராவிட இயக்கங்கள்தான் பகுத்தறிவையும், அறிவியல் பூர்வ வளர்ச்சியையும் வளர்த்து வருகிறது. இந்தி திணிப்புக்கு எதிராக திராவிட இயக்கம் நடத்திய போராட்டம் மிக முக்கியமானது. 

உதயநிதி

ஒரு காலத்தில் சமஸ்கிருதம் தெரிந்தால்தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலை இருந்தது, அதனை மாற்றியது நீதிக்கட்சிதான். மாநில மொழிகளை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிப்பது திராவிட இயக்கம்தான். சமஸ்கிருத ஆதிக்கத்தை எதிர்த்து குரல் கொடுத்தவர் தந்தை பெரியார். இந்தி எனும் மொழியை தி.மு.க எதிர்க்கவில்லை, இந்தி மொழி திணிப்பையே எதிர்க்கிறோம். 

சொன்ன வார்த்தையைக் காப்பாற்றிய உதயநிதி! அமைச்சராகாததற்கு இது தான் காரணமாம்!

மொழிப்போர் தியாகிகளை போற்றும் வகையில் தி.மு.க அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. நீட் தேர்வு என்பது மாநில சுயாட்சிக்கு எதிராக உள்ளது.  ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற பாஜகவின் அடாவடி திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழகத்தை சேர்ந்த பெரியார் கேரளாவில் வைக்கம் போராட்டத்தை முன்னெடுத்தவர் என்று கூறினார்.  

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!