அதிர்ச்சி... டூ வீலரில் பட்டாசு வெடித்து சிதறியதில் ஒருவர் உயிரிழப்பு... 7 பேர் படுகாயம்!

 
டூவீலரில் பட்டாசு வெடிவிபத்து

ஆந்திர மாநிலம் எலூரில் இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெங்காய வெடி ரக பட்டாசுகளை  சாக்குமூட்டையில் வைத்து, டூவீலரில் எடுத்துச் சென்ற போது திடீரென வெடித்து சிதறியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . 

ஆந்திர மாநிலம் எலூரைச் சேர்ந்தவர் சுதாகர். தீபாவளி கொண்டாட்டத்திற்காக வெங்காய வெடிகளையும், சக்திவாய்ந்த பட்டாசுகளையும் டூ வீலரில் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலான அந்த அதிர்ச்சி வீடியோவில், ஒரு நபர் ஒரு சந்து வழியாக தனது நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருக்கிறார். அந்த சந்தின் முனையை அடைவதற்குள் திடீரென பயங்கர சப்தத்துடன் டூவீலரில் முன்பக்கம் வைத்திருந்த பட்டாசு மூட்டை வெடிக்கிறது. அதன் பிறகு புகை மற்றும் தீ அவரது வாகனத்தை சூழ்கிறது. அந்த பகுதியில் நின்றிருந்தவர்கள் பயத்தில் அலறியடித்தப்படி ஓடி செல்கின்றனர். 


இந்த விபத்தில் வாகனத்தை ஓட்டிச் சென்ற சுதாகர் உயிரிழந்த நிலையில், பின்னால் அமர்ந்துச் சென்றவர் உட்பட 7 பேர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

போலீசாரின் விசாரணையில், அந்த நபர் ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனம் சாலையில்  இருந்த பள்ளத்தில் திடீரென விழுந்ததில் அவரது சாக்கு பையில் இருந்த பட்டாசுகள் ஒன்றுடன் ஒன்று  உரசி பயங்கர வெடிவிபத்தை ஏற்படுத்தியதாக தகவல்கள் தெரிய வந்துள்ளது. 

டூவீலரில் பட்டாசு வெடிவிபத்து

இந்த வெடிவிபத்தில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு வாகனங்களும் சேதமடைந்தன. இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகளில் இந்த வகையான வெங்காய வெடிகுண்டுகள் பொது மக்களுக்கு விற்பனைக்கு கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web