குவிந்த பக்தர்கள்... திருச்செந்தூரில் 50 அடி தூரம் கடல் உள்வாங்கியது!
அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் கோவில் பகுதியில் நேற்று கடல் நீர் சுமார் 50 அடி தூரம் உள்வாங்கி காணப்பட்டது.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதாரபதிக்கும் இடைப்பட்ட பகுதியில் ஒவ்வொரு மாதமும் வழக்கமாக அமாவாசை மற்றும் பெளர்ணமி நாட்கள், முந்தைய சில நாட்கள், பிந்தைய சில நாட்களில் காலையில் கடல்நீர் உள்வாங்குவதும், மாலையில் இயல்புநிலைக்கு திரும்புவதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நாளை அக்டோபர் 31ம் தேதி (வியாழக்கிழமை) மாலையில் அமாவாசை தொடங்குகிறது.இதனை முன்னிட்டு நேற்று காலையில் திருச்செந்தூர் கோவில் பகுதியில் கடல் நீரானது சுமார் 50 அடி தூரம் உள்வாங்கி காணப்பட்டது.
இதனால் கடலில் பாறைகள் பச்சை பசேல் என்று வெளியே தெரிந்தது. பின்னர் மாலையில் கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் எந்தவித அச்சமும் இன்றி வழக்கம்போல் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!