10 படங்கள் எடுத்திட்டு சினிமாவை விட்டு வெளியேறி விடுவேன்!! லோகேஷ் கனகராஜ் அதிரடி!!

 
லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யின் லியோ படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். இந்த படப்பிடிப்புக்கு இடையே இவர் அளித்த பேட்டி பெரும் வைரலாகி வருகிறது. அதில் 10 படங்கள் இயக்கிவிட்டு சென்று விடுவேன். 20 வருடம் சினிமாவில் இருக்க ஆசையில்லை எனக் கூறியுள்ளார். நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ்  தமிழ் சினிமாவில் யாரிடமும் உதவியாளராக இல்லாமல் இயக்குனராக சாதித்தவர்களில் ஒருவர். இவர் 

லியோ

2017ம் ஆண்டு சந்தீப் கிஷன், ஸ்ரீ நடிப்பில் வெளியான மாநகரம் படத்தின் மூலம்  இயக்குனராக அறிமுகமானார். அடுத்த திரைப்படமான கைதியில் கதாநாயகி கிடையாது. பாடல்கள் எதுவுமே கிடையாது.  இவையன்றி ஒரு திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற வைக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டி தனது தனித்தன்மையை வெளிப்படுத்தினார்.  முதல் 2 படங்களுமே சிக்ஸர். இதனாலேயே 3 திரைப்படமாக விஜய் மாஸ்டர் திரைப்படம் கையில் சிக்கியது இந்த படத்தின் மூலம் முன்னணி இயக்குனராகவும் அறியப்பட்டார் லோகேஷ் கனகராஜ்.  

லியோ

அதே போல் அடுத்து வெளியான விக்ரம் படத்தில்  கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில்  என முண்ணனி நட்சத்திரங்களை ஒரே படத்தில் களமிறக்கினார்.  அரசியலுக்கு தாவிய பிறகு வெற்றி படத்திற்காக பெரும் யோசனையில் இருந்த கமலை வைத்து விக்ரம் படத்தை வெற்றி படமாக்கி காட்டியவர்.   தற்போது மீண்டும் விஜய்யுடன் கூட்டணி அமைத்த லோகேஷ் கனகராஜ் லியோ படத்தை இயக்கி வருகிறார். லியோ படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இது குறித்து லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில்  நிறைய படங்கள் பண்ண வேண்டும் என்ற ஆசை எல்லாம் எனக்கு இல்லை. 20 வருஷமெல்லாம் சினிமாவில் இருக்க வேண்டும் என்ற ஐடியா இல்லை . 10   படங்கள் பண்ணிட்டு சினிமாவை விட்டு விலகிடுவேன் எனக் கூறியுள்ளார்.  லோகேஷ் கனகராஜின் இந்த வார்த்தை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web