10 வயது ஆன்மிக பேச்சாளருக்கு கொலை மிரட்டல்.. அடங்காத லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல்!

 
அபினவ் அரோரா

டெல்லியைச் சேர்ந்த 10 வயது அபினவ் அரோரா சிறுவன், 3 வயதிலிருந்தே ஆன்மீகப் பயணத்தில் ஈடுபட்டு வருவதாக  கூறப்படுகிறது.  இதற்கிடையில், திங்கள்கிழமை (அக் 28) லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடமிருந்து அபினவுக்கு கொலை மிரட்டல் வந்ததாக அவரது தாயார் ஜோதி அரோரா தெரிவித்தார்.

ஜோதி அரோரா கூறுகையில், ``நேற்றிரவு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது; ஆனால் அந்த அழைப்பை தவறுதலாக மறுத்துவிட்டேன். இதையடுத்து இன்று அதே எண்ணில் இருந்து எனக்கு குறுஞ்செய்தி வந்தது. அதில், அபினவ் கொல்லப்படப் போவதாக கூறியுள்ளனர். ஆனால் அபினவ் பக்தியாக இருப்பதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை.

லாரன்ஸ் பிஷ்னோய்

மேலும், இந்தி நடிகர் சல்மான் கான் மற்றும் எம்எல்ஏ ஸீஷான் சித்திக் ஆகியோருக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல் விடுத்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (அக் 25) மற்றொரு கொலை மிரட்டல் அழைப்பு வந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை கொலை மிரட்டல் விடுத்தது லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் அல்ல, காய்கறி விற்பனையாளர் என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!