ஒடிசா ரயில் விபத்தில் 18பேர் மாயம்!! அதிர்ச்சி தகவல்!!

 
ஒடிசா விபத்து

ஜூன் 2ம் தேதி ஒடிசா, பாலசோர் மாவட்டத்தில் பகனகா பஜார் ரயில் நிலையம் அருகே  3 ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதின. இந்த விபத்து உலகம் முழுவதுமே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.  இந்த கோர விபத்தில் 292 பேர் பலியாகினர். 1000 க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்தனர்.  காயமடைந்த 205 பேர்    SCB மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதில்  45 பேர் இன்னும்  லேசான காயங்களுடனும்   12 பேர் ஐசியுவிலும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதே நேரத்தில் ரயிலில் பயணம் செய்தவர்கள் குறித்த பட்டியலில் இன்னும் 18 பேரை கண்டுபிடிக்க முடியவில்லைஎன ஒரு தகவல் அறிக்கை தெரிவிக்கிறது. இத்தகவல் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுளது.  

ஒடிசா விபத்து
இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்த  சிபிஐக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.  ஒடிசா ரயில் விபத்து குறித்து விசாரிக்கும் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ, நேற்று ஜூன் 19ம் தேதி  திங்கட்கிழமை பாலசோரில் உள்ள சோரோ பிரிவு சிக்னல் ஜூனியர் பொறியாளர் அமீர் கான் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தடம் புரண்ட மின்சார ரயில்


ஜூன் 2 ம் தேதி பஹானாகா ரயில் நிலையம் அருகே பயங்கர விபத்து நடந்ததிலிருந்து அவரது குடும்ப உறுப்பினர்களுடன் காணாமல் போய்விட்டதாக அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் குறிப்பிட்டனர்.  ஜூனியர் பொறியாளரின் வாடகை வீட்டிற்கு சிபிஐ சீல் வைத்தது. இருப்பினும், இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  விபத்து நடந்த இடத்தில் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு  ஜூன் 16 ம் தேதியுடன்  பாலசோரிலிருந்து மத்திய புலனாய்வுக் குழு வெளியேறியது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web