திருச்சியில் பரபரப்பு... சமயபுரம் மாரியம்மன் கோயில் தெப்பகுளத்தில் மிதந்த 2 சடலங்கள்!

 
சமயபுரம்
 


திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் தெப்பகுளத்தில் 2 சடலங்கள் மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருச்சி சமயமபுரம் கோயில் தெப்பக்குளத்தில் மிதந்துக் கொண்டிருந்த 50 மற்றும் 30 வயது மதிக்கத்தக்க 2 பேரின் சடலங்களை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கடந்த 2 நாட்களுக்கு முன் இவர்கள் குளத்தில் மூழ்கி இறந்திருக்கலாம் என்றும் பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்த பின்னரே முழு தகவல் கிடைக்கும் என்றும் போலீசார்  தகவல் தெரிவித்துள்ளனர்.

சமயபுரம்

சமயபுரம் கோவில் தெப்பக்குளத்தில் சடலங்கள் மிதந்தது கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!