இன்றும், நாளையும் 28 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து... ’டானா’ புயல் எதிரொலி!

வங்கக்கடலில் உருவான டானா புயல் காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட இருந்த 28 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் டானா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று அக்டோபர் 23ம் தேதி மற்றும் நாளை அக்டோபர் 24ம் தேதி மற்றும் அக்டோபர் 26ம் தேதி இயக்கப்பட இருந்த ரயில் சேவைகளை கிழக்கு கடற்கரை ரயில்வே ரத்து செய்துள்ளது.
East Coast Railway has notified cancellation of following train services as a safety measure due to #CycloneDana
— Southern Railway (@GMSRailway) October 22, 2024
Please refer NTES/IRCTC or other official railway Websites/Apps for any further updates.#SouthernRailway #CycloneInOdisha #CycloneUpdate pic.twitter.com/ips2sY6qFT
வங்கக் கடலில் வலுப்பெற்றுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மேற்கு வடமேற்கில் நகர்ந்து நாளை புயலாக வலுப்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிஸா மற்றும் மேற்கு வங்க கடற்கரை இடையே புரி மற்றும் சாகர் தீவுகளுக்கு நடுவே தீவிரப் புயலாக வலுப்பெற்று அக்டோபர் 25ம் தேதி அதிகாலை கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.புயல் காரணமாக காற்றின் வேகம் அதிகமாக இருக்கக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், 28 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் ரயில்களும், சென்னை, புதுச்சேரி, பெங்களூரு உட்பட பல இடங்களில் இருந்து மேற்கு வங்கத்திற்கு இயக்கப்படும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. காரக்பூர் - விழுப்புரம் அதிவிரைவு ரயில், ஷாலிமார் - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில், ஹௌரா - திருச்சி அதிவிரைவு ரயில் உட்பட 28 ரயில்களின் சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!