அங்கன்வாடிகளில் வாரம் 3 முட்டை , செறிவூட்டப்பட்ட பிஸ்கட்!! முதல்வர் அதிரடி!!

 
மழலையர்

 சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  மத்திய  அரசின் திட்டங்கள்,  செயல்பாடுகள், நடைமுறைப்படுத்தப்படும் விதம், குறைகள், உடனடியாக செய்யப்பட வேண்டியவை குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த கூட்டத்தில்  முதல்வருடன்  அமைச்சர் பெரியகருப்பன், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மழலையர்

இதில்  உரையாற்றிய முதல்வர்   தமிழகத்தில் கிராமப்புற வளர்ச்சி என்பது மிக மிக முக்கியம். நாட்டின் எந்த ஒரு திட்டமும் கடைக்கோடி மக்களை சென்றடைய வேண்டும் அதில் கிராமப்புற வளர்ச்சி என்பது மிக மிக முக்கியமானது. ஆதி திராவிடர்கள் அதிகம் உள்ள  கிராமங்களின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.  தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் தமிழகத்தில் பொது வினியோக திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் தமிழகத்தில் பட்டினியின்மை என்ற இலக்கு எட்டப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.  

மழலையர் பள்ளி

அதன்படி அங்கன்வாடி மையங்களில் வாரம்3 முட்டைகள் வழங்கப்பட வேண்டும்.  பொருளாதார வளர்ச்சி என்பது அதன் குறியீட்டை வைத்து மட்டும் தீர்மானிக்கப்படாது.  மக்களின் வாழ்வாதாரம், மகிழ்ச்சியை வைத்தே வளர்ச்சி தீர்மானிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.  பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில்  அனைவருக்கும் தரமான மருத்துவ சேவைகளை வழங்க வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.  

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

என் குளியலறைக்கு பூட்டு இல்ல!! ஜான்வி ஜாலி ரவுண்ட் அப் !!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web