தீபாவளியை முன்னிட்டு 35 சிறப்பு ரயில்கள்... முன்பதிவு துவக்கம்!
இன்னும் தீபாவளி விடுமுறை தினங்களுக்கான ரயில் பயண டிக்கெட் முன்பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 35 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மிஸ் பண்ணாதீங்க. உடனே முன்பதிவு பண்ணிடுங்க.
இம்மாதம் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், பலரும் சொந்த ஊரில் உறவினர்களுடன் தீபாவளி கொண்டாட திட்டமிட்டு வருகின்றனர். இதனை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. குறிப்பாக, சென்னையில் இருந்து தென், மத்திய மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான விரைவு ரயில்களிலும் முன்பதிவு நிறைவடைந்துள்ளது.
சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து அக்டோபர் 29, 30 தேதிகளில் புறப்படும் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு நிறைவடைந்துள்ளது. இந்த ரயில்களில் மொத்தமாக 7,000 வரை காத்திருப்போர் பட்டியல் நீண்டு வருகிறது. இந்நிலையில், பயணிகள் வசதிக்காக அக்டோபர் 25 முதல் நவம்பர் 5ம் தேதி வரை 35க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதுபோல, சாத் பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 23 முதல் தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து புதுடெல்லி, அகமதாபாத்துக்கு வாரம் இருமுறை சிறப்பு ரயில்கள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, கோவை, திருவனந்தபுரம், மங்களூரு, பெங்களூரு, மைசூரு நகரங்களுக்கு அக்டோபர் 25ம் தேதி முதல் சிறப்பு ரயில்களை இயக்கவும் சென்னை, எர்ணாகுளத்தில் இருந்து புதுடெல்லி மற்றும் அகமதாபாத்துக்கு நவம்பர் 15ம் தேதி சிறப்பு ரயில்களை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!