6000 தொழிலாளர்கள் உயிரிழப்பு?! கால்பந்து போட்டியை நடத்தும் கத்தாரில் சர்ச்சைகள்!!

 
உலகக்கோப்பை கால்பந்து

உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2018 ல் நடத்தப்பட்ட கால்பந்து போட்டிகள் ரஷியாவில் நடத்தப்பட்டன. நடப்பாண்டு 2022ல் பிப்ஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் நடைபெற்று  வருகிறது. இதற்கான உரிமத்தை  2010ல் கத்தார் பெற்றது. அன்று முதல் போட்டிகளை நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யத் தொடங்கியது. உலகக் கோப்பை போட்டியை நடத்துவதற்காகவே  கத்தாரில் ஒரு புதிய நகரம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளில் 30000க்கும் மேற்பட்ட இந்தியா, வங்கதேசம், நேபாளம் மற்றும் பிலிப்பைன்ஸ்  நாடுகளைச் சேர்ந்த புலம் பெயர் தொழிலாளர்கள் தான் இந்த பணிகளில் அதிகமாக ஈடுபடுத்தப்பட்டனர்.

உலகக்கோப்பை கால்பந்து


இவர்களை நடத்திய விதம் தற்போது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. அதன்படி உலகக் கோப்பைக்கான பணிகள் கத்தாரில் தொடங்கப்பட்ட பிறகு இந்த பத்தாண்டு காலத்தில் மட்டும் 6000க்கும்  மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்து உள்ளதாக ‘தி கார்டியன்’ ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. கத்தாரில்  கடுமையான வெப்பத்தில் தொடர்ந்து 12 மணி நேரம்  பணி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது.  கடுமையான வேலைப்பளு, தாங்க முடியாத வெப்பம்  காரணமாக பணியாளர்கள் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.  ஆனால் இவர்கள்  இறப்புக்கள் ‘இயற்கை மரணம்’ என்றே பதிவு செய்யப்பட்டன. இந்தக் எண்ணிக்கை குறைத்துக் காட்டப்பட்டுள்ளது என  சர்வதேச தொழிலாளர் அமைப்பு கூறுகிறது.

உலகக்கோப்பை கால்பந்து


இதன் அடிப்படையில் கத்தாரில் கால்பந்து உலகக்கோப்பை தொடரை நடத்த பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. கத்தாரை போட்டி நடத்தும் நாடாகத் தேர்வு செய்தது தவறு என்று முன்னாள் பிஃபாஃ தலைவர் செப் பிளாட்டர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் உலகக் கோப்பை மைதானத்தை உருவாக்க பணியில் ஈடுபடுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் புகைப்படங்களை கொண்ட மொசைக் ஆர்ட் பேனர், லுசைல் மைதான வாயிலில் வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு சர்ச்சைகள், எதிர்ப்புக்கள் கிளம்பிய போதும் விமரிசையாக உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் தொடக்க விழா நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

என் குளியலறைக்கு பூட்டு இல்ல!! ஜான்வி ஜாலி ரவுண்ட் அப் !!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web