அரசு தொகுப்பு வீடு இடிந்து விழுந்து 7ம் வகுப்பு மாணவன் முகம் சிதைவு!!

 
ஆனந்த்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக அக்டோபர்  29ம் தேதி  முதல் பல பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. அதன்பிறகு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்றதால் பெரும்பாலான மாவட்டங்களில் அதிகனமழை வெளுத்து வாங்கியது. இதனால் 29 மாவட்டங்களில் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில்  திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தொடர்ந்து வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைய வாய்ப்பு இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. 

அரசு தொகுப்பு வீடு

திருவாரூர் மாவட்டம் அலிவலம் ஊராட்சியில் கோவில்பத்து கிராமத்தை சேர்ந்தவர் வீரக்குமார். இவரது மனைவி பரிமளா. இந்த தம்பதிக்கு ஆனந்த் (11) என்ற மகன் உள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், வீட்டில் தனது பெற்றோருடன் படுத்திருந்த போது அரசு தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. மேற்கூரை இடிந்து விழுந்ததில் வீட்டின் உள்ளே இருந்த 7-ம் வகுப்பு மாணவன் ஆனந்த் முகம் சிதைந்து உள்ளது. 

இதில் படுகாயமடைந்த சிறுவன் உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவாரூர் தாலூகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

போலீஸ்

விசாரணையில் விபத்து ஏற்பட்ட வீடு 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது. இதே போன்று மேலும் 22 அரசு தொகுப்பு வீடுகள் அந்த பகுதியில் இருப்பதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

திகில் வீடியோ!! 5 அடி முதலையை விழுங்கிய மலைப்பாம்பு!!

வைரல் வீடியோ!! என் குளியலறைக்கு பூட்டு இல்ல!! ஜான்வி ஜாலி ரவுண்ட் அப் !!

வீடியோ!! ராஜநாகத்துடன் சண்டையிட்டு குஞ்சுகளை காத்த தாய்க்கோழி!!

வீடியோ!! மனிதத் தலையுடன் ஆட்டுக்குட்டி!! அசத்தல் ஆச்சர்யம்!!

From around the web