அதிரடி சரவெடி!! இன்று 71000 பேருக்கு பணி நியமன ஆணை!!

 
ரோஜ்கார்மேளா

இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை களையவும், இளைஞர்களின் வருங்காலத்தை வளமாக்கவும்  இந்திய பிரதமர் மோடி  ராஜ்கார் மேளா திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.இத்திட்டத்தின் படிஅடுத்த ஒன்றரை வருடத்தில் 10லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என பிரதமர் அறிவித்திருந்தார். 

மோடி

அந்த வகையில் கடந்த  அக்டோபர் மாதத்தில் 75000 பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது. இன்று சுமார் 71 ஆயிரம் பேருக்கு பிரதமர் மோடி நியமன கடிதத்தை வழங்க இருக்கிறார்.  இந்நிலையில், மத்திய அரசின் ரோஜ்கார் மேளா  நவம்பர் 22ம் தேதி  இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இந்த மேளாவில்  71 ஆயிரம் பேருக்கு காணொலி  மூலம் பிரதமர் மோடி பணி நியமன கடிதங்களை வழங்குகிறார். அவர்களிடம் உரையாற்றுகிறார்.  இவர்கள் அனைவருக்கும் காகித வடிவிலான பணி நியமன கடிதங்கள், நாடு முழுவதும் 45 இடங்களில் நேரடியாக வழங்கப்பட உள்ளன.

பிரதமர் மோடி மீண்டும் முதலிடம்

சட்டசபை தேர்தல் நடைபெறும்  குஜராத், இமாசலபிரதேசம் மாநிலங்களில் மட்டும் இந்நிகழ்ச்சி நடத்தப்படவில்லை.  வேலைவாய்ப்பு உருவாக்குவதற்கு உயர் முன்னுரிமை அளிக்கப்படும் என கூறிய  பிரதமரின் உறுதிப்பாட்டை இது தெரிவிப்பதாக பிரதமர் அலுவலகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.மேலும் வேலைவாய்ப்புகளை உருவாக்க இது தூண்டுகோலாக அமையலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக பணி நியமனம் பெற்றவர்களுக்கு ஆன்லைன் புத்தாக்க பயிற்சி திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

என் குளியலறைக்கு பூட்டு இல்ல!! ஜான்வி ஜாலி ரவுண்ட் அப் !!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web