கவனமா இருங்க!! தினமும் 4500 பேருக்கு மெட்ராஸ் ஐ!! அமைச்சர் எச்சரிக்கை!!

 
மெட்ராஸ் ஐ

தமிழகத்தில்  கொரோனா  கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது . கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் 'மெட்ராஸ் ஐ' எனும் கண் நோய் வேகமாக பரவி வருகிறது. சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கண் மருத்துவர்களிடம் சிகிச்சைக்காக செல்பவர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இந்த நோய் கண்ணில் கன்சங்டிவா என்ற விழி வெண் படலத்தில் உருவாகிறது.

மெட்ராஸ் ஐ

இது அடினோ வைரஸ் என்ற கிருமியினால் வருகிறது. இந்நிலையில், 'மெட்ராஸ் ஐ' பரவல் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்   மா.சுப்பிரமணியன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து 'மெட்ராஸ் ஐ' தீவிரமாக பரவத் தொடங்கியுள்ளது. கண்ணில் உறுத்தல், சிவந்த நிறம், அதிக கண்ணீர், வீக்கம் இவையே 'மெட்ராஸ் ஐ'  யின் அறிகுறிகள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நோய் குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டால் 4 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். மெட்ராஸ் ஐ வந்தது உறுதி செய்யப்பட்டால்  தாமாக மருந்தகங்களில் கண் மருந்து வாங்கத் தேவையில்லை. மருத்துவமனையில் உரிய மருத்துவர் அறிவுறுத்தல்படி மருந்து வாங்கி பயன்படுத்த வேண்டும்.

மெட்ராஸ் ஐ

டிசம்பர் 2வது வாரத்திற்குள் 'மெட்ராஸ் ஐ'  கட்டுப்படுத்தப்படும். தற்போது  தமிழகத்தில் தினசரி 4,500 பேர் வரை மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மெட்ராஸ் ஐ பரவுவதை கட்டுப்படுத்த தற்காலிக மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம்  தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவர அனைத்து உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் இதுவரை 1.50 லட்சம்  பேருக்கு மெட்ராஸ் ஐ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மெட்ராஸ் ஐ விரைந்து பரவும் தன்மை கொண்டதால் மக்கள் சுயசிகிச்சை எடுத்துக் கொள்ளக்கூடாது என அறிவுறுத்தியுள்ளார். 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

என் குளியலறைக்கு பூட்டு இல்ல!! ஜான்வி ஜாலி ரவுண்ட் அப் !!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web