கவனமா இருங்க மக்களே!! இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!!

 
மஞ்சள் அலர்ட்

தமிழகத்தில் அக்டோபர் 29ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.  நவம்பர் 21, 22 ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்யலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. 

மழை


அதன்படி, நவம்பர் 21 ம் தேதி  ராணிப்பேட்டை, கடலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒரு சில பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும்.நாளை மறுநாள் நவம்பர் 22ம் தேதி  வரையிலான காலகட்டத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் தமிழக மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் சில பாகங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.

மழை

கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இடி , மின்னல் , சூறாவளி காற்றின் வேகமும் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். இதனால்  நவம்பர் 23 ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

திகில் வீடியோ!! 5 அடி முதலையை விழுங்கிய மலைப்பாம்பு!!

வைரல் வீடியோ!! என் குளியலறைக்கு பூட்டு இல்ல!! ஜான்வி ஜாலி ரவுண்ட் அப் !!

வீடியோ!! ராஜநாகத்துடன் சண்டையிட்டு குஞ்சுகளை காத்த தாய்க்கோழி!!

வீடியோ!! மனிதத் தலையுடன் ஆட்டுக்குட்டி!! அசத்தல் ஆச்சர்யம்!!

From around the web