ப்ளூ டிக் சேவை நிறுத்தம்!! குழப்பத்தில் பயனர்கள்!!

 
எலான் மஸ்க்

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவான எலான் மஸ்க் டெஸ்லாவில் தலைமை செயல் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவர் சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார். அதன் பிறகு பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளார். அதன்படி டுவிட்டரில் தற்போது, அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்குகளில் 'புளூ டிக்'  சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர்.  

எலான் மஸ்க்

அவர்களுடைய அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு தான் இது என்பதை உறுதிபடுத்திக்கொள்ள, டுவிட்டர் தளத்தில் பெயருக்கு அருகில் நீலநிற புளூ டிக் குறியீடு குறிக்கப்படும்.  இந்நிலையில், அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை உறுதிபடுத்த பயனர்களிடம் ஒவ்வொரு மாதமும் ரூ1600 வரை கட்டண நிர்ணயித்தார் எலான் மஸ்க். அவரது இந்த உத்தரவு பெரும் பயனர்களிடையே அதிருப்தியை உருவாக்கியது.     மேலும் பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புக்கள் கிளம்பின  இதனை தொடர்ந்து டுவிட்டர் 'புளூ செக்கிற்கு' இனி மாதம் ரு719 மட்டும் செலுத்தினால் போதும் என  அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.  

எலான் மஸ்க்

இந்நிலையில், அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை உறுதிபடுத்தும் வகையில்  புளூ செக் சந்தா சேவையை மீண்டும் தொடங்குவதை டுவிட்டர் நிறுத்தி தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அத்துடன் இந்த புளூ டிக் சேவையை பயன்படுத்தும் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனித்தனி அடையாள நிறங்களை கொடுக்க இருப்பதாகவும், அது குறித்து பரிசீலணை நடைபெற்று வருவதாகவும் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

என் குளியலறைக்கு பூட்டு இல்ல!! ஜான்வி ஜாலி ரவுண்ட் அப் !!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web