குழந்தைகளின் பேவரிட் ரஸ்னா நிறுவனர் காலமானார்!!

 
ரஸ்னா


1980களில் முண்ணனியில் இருந்த குளிர்பான நிறுவனங்களில் ஒன்று ரஸ்னா. குழந்தைகளிடையே அந்த காலகட்டத்தில் பெரும் வரவேற்பை பெற்ற  குளிர்பான தயாரிப்பான ரஸ்னா நிறுவனர் அரீஷ் பைரோஜ்ஷா கம்பட்டா  வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைபாடு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 85.

ரஸ்னா


இவர் அகமதாபாத் பார்சி பஞ்சாயத்தின் முன்னாள் தலைவராகவும், இந்தியாவின் பார்சி ஜோராஸ்ட்ரியன் அஞ்சுமான்களின் கூட்டமைப்பின் துணைத் தலைவராகவும்  அங்கம் வகித்தவர்.  இந்தியா முழுவதும் 80களில் 1.8 மில்லியன் சில்லறை விற்பனை நிலையங்களில் விற்கப்பட்ட ரஸ்னா என்ற ஐகானிக் பான பிராண்டை உருவாக்கியவர் . இவரது இழப்பு குறித்து வர்த்தகர்கள்  'தொழில்துறையில் இவரின் இழப்பு பேரிழப்பு என்றும் சமூக வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை அளித்தவர்' என தெரிவித்துள்ளனர்.

ரஸ்னா

தற்போது வரை ரஸ்னா இப்போது உலகம் முழுவதும்  60 நாடுகளில் பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் விற்பனையில் உள்ளது மட்டுமல்ல  சந்தையில் தேடப்படும் குளிர்பானங்களில் ஒன்றாகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.  70களில் நடுத்தர வர்க்கத்தினர் பட்ஜெட்டில் எட்டாக்கனியாக இருந்த குளிர்பானங்களை நம் வீட்டு சமையலறைகளில் கொண்டு வந்து சேர்த்த பெருமைக்குரியவர். அதன் பிறகு குழந்தைகளில் பேவரிட் குளிர்பானமாக மாறி போனது. 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

என் குளியலறைக்கு பூட்டு இல்ல!! ஜான்வி ஜாலி ரவுண்ட் அப் !!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web