ஜனவரி 5 ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை நீட்டிப்பு!! கொண்டாடுங்க மாணவர்களே!!

 
மாணவிகள்

தமிழகத்தில்  அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியார் மெட்ரிக் என  அனைத்து பள்ளிகளிலும் தற்போது அரையாண்டு தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. அரையாண்டு தேர்வுகளை பொறுத்தவரை  இந்த தேர்வுக்கு மாவட்ட அளவில், பொதுவான வினாத்தாள்கள் வழங்கப்பட்டுள்ளன.இந்த தேர்வுகள் இன்று டிசம்பர் 23ம் தேதியுடன் முடிவடைகிறது.

மாணவர்கள்

 9 முதல் 12ம் வகுப்பு வரை டிசம்பர் 16ம் தேதி தொடங்கி இன்று டிசம்பர் 23ம் தேதி வரை நடைபெறுகிறது. அதே போல் 1 முதல்  8ம் வகுப்பு மாணவர்களுக்கு, டிசம்பர் 19ம் தேதி முதல் இன்று டிசம்பர் 23 வரை நடைபெறுகிறது. அமாவாசை திதி கொடுத்ததும் இதைச் செய்ய மறக்காதீங்க இந்நிலையில், தமிழகத்தில்  உள்ள பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறையாக நாளை டிசம்பர் 24ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை, 9 நாட்கள் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்படும் என ஏற்கனவே  பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில், அரையாண்டு விடுமுறை நாளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார்  தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்ட  செய்திக்குறிப்பில்  ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் இதில் பங்கேற்க வேண்டியிருப்பதால் 1 முதல் 5ம் வகுப்பு வரை  பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 5ம் தேதி முதல்  பள்ளிகள் தொடங்கப்படும்.  அதன்படி 12 நாட்கள் அரையாண்டு விடுமுறை விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றபடி, 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கெனவே அறிவித்தபடி ஜனவரி 2-ம் தேதி பள்ளிகள் தொடங்கும் என அறிவித்துள்ளார்

விடுமுறை
அதே நேரத்தில்  அரையாண்டு விடுமுறை,  கிறிஸ்துமஸ் பண்டிகைகளை கொண்டாடுவதற்காக பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு  செல்ல முடிவு செய்துள்ளனர். இதன் அடிப்படையில்  கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. இன்றும், நாளையும் சென்னையிலிருந்து 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என  போக்குவரத்து கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

புதுவருஷம் இந்த 6 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்

From around the web