பயணிகள் மீது மோதிய சரக்கு ரயில்!! உடல் நசுங்கி 3 பேர் பலி!! 7 பேர் கவலைக்கிடம்!!

 
தடம் புரண்ட ரயில்

ஒடிசா மாநிலத்தில்  ஜாஜ்பூர் பகுதியில்  கோரே ரயில் நிலையத்தில் நவம்பர் 21ம் தேதி திங்கட்கிழமை நேற்று காலை 6.44 மணிக்கு சரக்கு ரயில்  தடம்புரண்டது. சரக்கு ரயிலின் ஓட்டுனர் திடீரென பிரேக் அடித்ததால் பெட்டிகள் தடம் புரண்டதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. தடம் புரண்ட 8 பெட்டிகளும் ப்ளாட்பார்மில் நின்று கொண்டிருந்த பயணிகள் மேல் விழுந்ததில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

தடம் புரண்ட ரயில்

மேலும் சில 7 பேர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் மேலும் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் சரக்கு ரயில் தடம் புரண்ட விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ 5 லட்சமும்,  படுகாயமடைந்தவர்களுக்கு ரூ 2 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25000மும் நிவாரணத் தொகை வழங்கப்படும் ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தடம் புரண்ட ரயில்

அதே நேரத்தில்  ஒடிசாமுதல்வர்  நவீன் பட்நாயக் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து அவரும் பலியானவர்களின் உறவினர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணமும், படுகாயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சையும் அளிக்கப்படும் என அறிவித்துள்ளார். இந்நிலையில், சரக்கு ரயில் தடம் புரண்ட விபத்து நடைபெற்ற இருப்பு பாதையை சீரமைக்கும் பொருட்டு அந்த வழியாக இயக்கப்படும் 19 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 20 ரயில்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

என் குளியலறைக்கு பூட்டு இல்ல!! ஜான்வி ஜாலி ரவுண்ட் அப் !!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web